Wednesday, August 8, 2012

வாதாபி நகர விஜயம்!!!-1


இந்த blog யை நான் home decor க்காக தான் ஆரம்பித்தேன் என்றாலும் இந்த பயண கட்டுரை யை  கண்டிப்பாக இங்கே பதிவிட்டே ஆக வேண்டும். 

இந்த blog யை பார்க்கும் எத்தனை பேர் கல்கியின் "சிவகாமியின் சபதம்" படித்து இருப்பீர்கள் என்று தெரியவில்லை.படித்து இருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு ஆச்சர்யத்தை வரவைக்கும்.கொஞ்சம் பெரிய பதிவுதான்.நிறைய படங்களும் இருக்கும்.ஆனால் முழுதும் படித்து விடுங்கள் ப்ளீஸ்:-) 

அது கடந்த கோடையில் ஒரு மாதம் . ஒரு வார விடுமுறையை கழிப்பதற்காக நானும் என் கணவரும் எங்காவது செல்ல முடிவு எடுத்தோம்.எனக்கு சரித்திர முக்கியம் வாய்ந்த இடங்களை பார்க்க ரெம்ப பிடிக்கும்.ஆனால் என் கணவருக்கோ குளிர் பிரதேசங்கள் , தீம் பார்க் போன்றவை ரெம்ப இஷ்டம்.அந்த வாரம் என்னவோ வழக்கத்திற்கு மாறாக அவருக்கு பிடிக்கும் என்று கர்நாடகாவில் உள்ள chikmagallur செல்லலாம் என்று நானும் , எனக்கு பிடிக்கும் என்று பாதாமி என்ற ஊருக்கு செல்லலாம் என்று அவரும் வெவ்வேறு பிளான் செய்தோம்...இறுதியில் பாதாமிக்கே செல்வதாக முடிவாயிற்று.காரணம் நாங்கள் இருக்கும் இடத்திற்கு கொஞ்சம் பக்கமாக இருந்தது மற்றும் NH ரோடு ஆக இருப்பதால் பயணம் எளிதாக இருக்கும் என்று முடிவு செய்து கிளம்பினோம்.

மொபைல் இல் navigator ஐ on செய்தவாறு பயணம் தொடங்கியது.அந்த ஊரை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது.வந்தான் வென்றான் படத்தில் வரும் "காஞ்சனா மாலா" பட பாடலும் சிறுத்தையின் கிளைமாக்ஸ் கட்சியும் அங்கே எடுக்க பட்டது என்ற தகவலை என் கணவருக்கு யாரோ சொல்லி இருந்தனர்...சரித்திர முக்கித்துவம் வாய்ந்த இடம் என்ற இடம் என்று மட்டுமே தெரிந்திருந்தது.நான்  அங்கு என்ன என்ன இடம் இருக்கிறது என்று மொபைல் இல் google செய்து பார்க்கலாம் என்று பாதாமி என்று type செய்தேன்.வழக்கம் போல விக்கிபீடியா முதலில் வந்தது.க்ளிக்கிய உடன் நான் பார்த்த முதல் வாசகம் " Badami (Kannadaಬದಾಮಿ), formerly known as Vatapi,  " .....

என்னது...கண்ணை கசக்கி கொண்டு திருப்பியும் பார்த்தேன்..."வாதாபி"....சிவகாமியின் சபதம் படித்தவர்களுக்கு வாதாபி நகரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்திருக்கும்.  ஏன் என்றால் நம்மில் பலருக்கு அந்த நாவலில் வரும் காஞ்சியை தெரியும்,மகாபலிபுரத்தை தெரியும்,எல்லோரா குகைகளை கூட தெரியும்.

வாதாபி நகரம் இன்னும் இருக்கிறது என்பது எனக்கு புதிய செய்தியே...   சிவகாமி அம்மை நாற்சந்தியில் (கற்பனை கதா பாத்திரம் என்றாலும் நம்பும் படி எழுதுவது தானே கல்கிக்கு வழக்கம்) நடனம் ஆடிய ஊருக்கு செல்கிறோம். ...மாமல்லர் துவம்சம் செய்த வாதாபி கோட்டைக்கு நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.உண்மைலேயே தலை கால் புரிய வில்லை எனக்கு...

உங்களில் எத்தனை பேருக்கு பாதாமி தான் வாதாபி என்று தெரியும் என்று எனக்கு தெரியாது.இருந்தாலும் நான் பார்த்ததை சிவகாமியின் சபதம் வாசகர் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவை தொடர்கிறேன். இனி  படங்களுடன் செய்திகளை பார்க்கலாம்.


வாதாபி நகரை மாமல்லன் வென்றதை "சிறு செய்தியாக" சொல்லும் ஒரு விளக்க தட்டி...!!!! நமக்கு தெரிந்தவரை புலிகேசி காஞ்சியிலிருந்து திரும்போது செய்த அராஜகத்திற்கு பழி வாங்கவே மாமல்லன் படை எடுத்து வந்தான் என்பது...இங்கு உள்ளவர்கள் புலிகேசியை ரெம்ப புகழ்கிறார்கள்.மாமல்லன் தான் இங்கு வந்து எல்லாம் அழித்து விட்டானாம்...ம்ம்ம்..


அங்கு சென்றவுடன் பார்க்க வேண்டிய முதல் இடம் museum ...  பின்னால் தெரிவது வாதாபி கோட்டையே தான்!!! அது ஒரு சிறிய அருங்காட்சியகம் தான்...உள்ளே சென்றால் இன்னொரு ஆச்சர்யமும் உள்ளது...அது இந்த வாதாபி மலை தொடர்களில் mesolithic (இடைக் கற்காலம்) மனிதர்கள் வாழ்ந்த தடயங்களும் கிடைத்திருப்பதுதான். 
அருங்காட்சியகத்திற்கு வெளியே ஒரு பெரிய ஏரி இருக்கிறது.அகஸ்தியர் ஏரி என்று அழைக்கிறார்கள் . இந்த படம் வாதாபி கோட்டைக்கு எதிரே இருக்கும் வாதாபி குகை கோயில்களில் இருந்து எடுத்தது.


அருங்காட்சியகம்  பார்த்து விட்டு வெளியே வந்த உடன் உங்கள் கண்களில் தெரிவது வாதாபி கோட்டையின் நுழை வாயில்.

கோட்டை சிதிலமடைந்து தான் இருக்கிறது....பின்னே வாதாபி போர் எப்படி பட்ட போர்... 


மாமல்லனும் பரஞ்ச்யோதியும் உள்நுழைந்த கோட்டை வாயில் வழியே உள்ளே செல்வோமா...
ஒரே பதிவில் இதை முடிக்க முடியாது என்று நினைக்கிறேன்.மிகவும் நீண்டதாக இருந்தால் படிப்பதற்கு எளிதாக இருக்காது.இரண்டாம் பாகத்தில் ஆவது முடித்து விடுகிறேன்.

இதன் தொடர்ச்சி :
வாதாபி நகர விஜயம்!!!-2
வாதாபி நகர விஜயம்!!!-3
வாதாபி நகர விஜயம்!!!-4


17 comments:

  1. மிக நல்ல பகிர்வு,வாதாபி கோட்டைக்குள் நுழைய நானும் தயாராகிவிட்டேன்.தொடர்ந்து பதிவிடுங்கள்.

    ReplyDelete
  2. Wow...I could feel your excitement Gomathi! :)

    Post the next part soon..I like your write-up!

    ReplyDelete
  3. ம்... எங்கே அடுத்த பகுதி!!

    ReplyDelete
  4. லீலா,
    அழகான பயணக்கட்டுரை..
    பயணிக்க தயாராகிவிட்டேன்..

    ReplyDelete
  5. Thanks, i love to read. your blog is like a treasure chest. I wish my daughter can read tamil .keep it up

    ReplyDelete
  6. கோமதி அக்கா ரொம்ப நல்லா இருந்தது உங்க கட்டுரை சிவகாமியின் சபதம் நானும் படித்து இருக்கிறேன் இன்னும் தொடருங்கள் பயணத்தை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி ஆசியா...வாங்க..வாங்க

    மகி...தேங்க்ஸ் ப்பா...உங்களுக்கு தான் அடுத்த பதிவு..முன்னாடி உங்ககிட்ட சொன்னப்ப நீங்க கதை மறந்து போச்சுன்னு சொன்னீங்களா ...அதுனாலதான்...

    நன்றி Kavitha & நாடோடிப் பையன்

    நீலா...என்ன என்னென்னமோ சொல்றீங்க...:-D ...பொண்ணுக்கு தமிழ் சொல்லி கொடுத்துடுங்க...

    நன்றி Elaya

    ReplyDelete
  8. thx so much for sharing such a wonderful information abt Vatapi
    please keep posting.

    ReplyDelete
  9. முதல் முறையாக உங்கள் இடுகையை வாசிப்பவள் .

    வாதாபி நகரம் தான் பாதாமி என்பது உங்கள் இடுகையின் வாயிலாகவே
    நான் அறிய நேர்ந்தது.அரிய/அறிய படவேண்டிய செய்தி.

    வாதாபி கோட்டை வாயிலை இடித்து , உள்ளே நுழைய

    பரஞ்சோதி யானை முகத்தவனை வேண்டி நின்று , பின் கோவில் சமைத்தான்.

    கோட்டை வாசலை தாண்டி எங்களை இட்டு செல்ல , விரைந்து
    இடுகையை பதிவு செய்யுங்கள் தோழியே.

    பயணத்திற்கு கடவு சீட்டுடன் காத்திருக்கிறோம் ..

    ReplyDelete
  10. Excellent account Will look forward to your continuation posts
    swaminathan

    ReplyDelete
  11. Wonderful and amazing informations about Vadapi... Ofcourse, we knew something about great author Sandilyan. Whenever you write about geographical locations, please, mention the co-ordinates which help the visitors directly locate in Google Earth. Kindly mention the route map or distance between major towns, which help the visitors a lot. Thanks for posting a superb historical location. Keep it up. Jc. S. Murali, JCI Vellore Metro.

    ReplyDelete
  12. Excellent information about Vadapi. makes me eager to visit the place...

    ReplyDelete
  13. Swaminathan..Thanks for visiting.Vatapi continution posts போட்டு முடிஞ்சாச்சே...மொத்தம் 4 parts இருக்கும்.

    ReplyDelete
  14. நன்றி முரளி.உங்க input க்கு நன்றி.பார்ட் 4 ல add பண்ணிருக்கேன்.

    ReplyDelete
  15. நன்றி கணேஷ்.

    ReplyDelete
  16. நான் பாதாமி பற்றி என்னுடைய பயண வழிகாட்டியில் 1977ல் எழுதினேன் .அப்பொழுது கோட்டை சிதறல் மட்டுமே .இன்று பொலிவுடன் இருப்பது தங்கள் பதிவு மூலம் அறிகிறேன் .நன்றி .தொடர்ந்து எழுதுங்கள் .மகிழ்பவனில் நானும் ஒருவன்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...