Wednesday, August 8, 2012

வாதாபி நகர விஜயம்!!!-2

இத படிக்கும் முன் இதை  வாதாபி நகர விஜயம்!!!-1 கொஞ்சம் படிச்சுட்டு வாங்க


அட...படிச்ச எல்லாருக்கும் என் பயண கட்டுரை பிடித்ததற்கு ரெம்ப சந்தோசம் and நன்றிகள்....இந்த பதிவுலயும் முடிக்கலன்னா திட்ட மாட்டீங்க தானே...

வாதாபி கோட்டைக்குள் நுழைவதற்கு முன்னால் சிவகாமியின் சபத கதை சுருக்கத்தை பார்த்து விடுவோம்...ஏன் னா உள்ள நுழையும் போது என் கணவருக்கு இந்த கதைய சொல்லிட்டே தான் நுழைந்தேன்.அவர் இப்புதினத்தை படிச்சதில்லை...அதுனால நான் ரெம்ப ஓவர் excited (!!!) டா கோட்டைக்குள் நுழையும் போது அவருக்கு ஒன்னும் புரியல...அதே மாதிரி இந்த பதிவ படிக்கற யாராச்சும் சிவகாமியின் சபதம் படிக்காம இருந்தாங்கன்னா அவங்களையும் படிக்க வைக்குரதுக்குதான் :-) நம்ம கால சக்கரத்தில் கூட்டிட்டு போறதுக்குத்தான் (கல்கியோட effect )இந்த கதை சுருக்கம்... 

கதை சுருக்கம் :

இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும்.

இந்த சூழ்நிலையில் நாட்டியகலையில் சிறந்து விளங்கும் ஆயனர் மகள்சிவகாமி யும் பல்லவ மன்னனின் மகனும் காதல் கொள்கின்றனர்.
மகேந்திர பல்லவனுக்கும் தன் மகன் மாமல்லன் சிவகாமியை 
மணந்து கொள்ளவதில் விருப்பம் இல்லை.


நாகநந்தியும் (வாதாபி சக்கரவர்த்தி யின் தம்பி ) சிவகாமியின் பால் ஈர்க்கபடுதல்,வாதாபி மன்னனின் காஞ்சி விஜயம்,காஞ்சியை விட்டு அவன்செல்லும் போது அவன் நடத்தும் அராஜகம் ,சிவகாமியை சிறை பிடித்து போதல்,வாதாபி நகர தெருக்களில் சிவகாமி நடனம் ஆடி தமிழ் மக்களைகாப்பாற்றுதல் என்று கதை தொடர்கிறது.சிவகாமியை மீட்க வரும் மாமல்லன் உடன் சிவகாமி வர மறுக்கிறாள்... காரணம் அவள் செய்த சபதம்...     

சிவகாமி நாக நந்தியிடம் கீழ் கண்டவாறு சபதம் ஏற்கிறாள் 

"வாதாபியைவிட்டு இப்போது கிளம்ப மாட்டேன். எப்போது புறப்படுவேன் தெரியுமா? 
நீங்கள் பயங்கொள்ளி என்று அவதூறு கூறிய வீர மாமல்லர், ஒரு நாள் இந்த வாதாபி நகர் மீது படை எடுத்து வருவார். நரிக்கூட்டத்தின் மீது சிங்கம் பாய்வதைப்போல, சாளுக்கிய சைன்யக்களை சின்னாபின்னம் செய்வார். நாற்சந்தி முனையிலே எங்களை நடனம் ஆடச்செய்த மாபாதக புலிகேசியை எமலோகம் அனுப்புவார்
. தமிழ்ப் பெண்களையும் ஆடவர்களையும் எந்த வீதிககளில் கட்டி இழுத்துக்கொண்டு போனார்களோ, அந்த வீதிகளில் இரத்த ஆறு ஓடும். அவர்களை எந்த நாற்சந்தி முனையிலே சவுக்கால் அடித்தார்களோ, அங்கே வாதாபி மக்களின் பிரேதங்கள் நாதியற்றுக் கிடக்கும். வாதாபி நகரத்தின் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் எரிந்து சாம்பல் ஆகும். சாளுக்கியத் தலைநகர் சுடுகாடாக ஆகும். இத்தனைக்குப் பிறகு, போரில் வெற்றி பெற்ற வெற்றி மாலையோடு, வீர மாமல்லர் வருவார். என்னைக் கரம் பற்றி அழைத்துச் செல்ல வருவார். அப்போதுதான் நான் புறப்படுவேன். நீர் அனுப்பிப் போக மாட்டேன்.பல்லக்கில் ஏற்றி அனுப்பினாலும் போக மாட்டேன். யானை மீது ஏற்றி அனுப்பினாலும் போக மாட்டேன்”

இதுதான் சிவகாமியின் சபதம்.

okay...
இப்போ இதே ஒரு சினிமா கதையா இருந்தா ஒரு சோக பாடல் ஒன்னு வந்துருக்கும்.நம்மளோடது கல்கியோட கதை ஆச்சே...heroine ஹீரோக்காக காத்திட்டு இருக்காங்க...அப்போ ஹீரோ இங்க வந்தா நல்லா இருக்கும் அப்படின்னு நினச்சு ஒரு டூயட் சாங் இப்போ வருது....;-)

வேற ஒன்னும் இல்லங்க...நம்ம வந்தான் வென்றான் பட பாடல் தான்....topsya சிவகாமிய கற்பனை பண்றது கொஞ்சம் கஷ்டம்தான்...(கல்கி இத பார்த்திருந்தா என் நடுமண்டைல ஓங்கி ஒரு குட்டு வச்சுருப்பார்... )...இருந்தாலும் நமக்கு வேற வழி இல்ல...அப்படியே ஜீவாவ மாமல்லரா நினைச்சுகிட்டு இந்த பாட்டை பார்த்துட்டு வாங்க...இந்த பாட்டு fulla வாதாபி ல எடுத்த பாடல்...hd சாங்...ஓவர் டு வீடியோ...



பாட்ட பார்த்துடீங்களா...சிவகாமி இந்த மாதிரி சபதம் எடுத்துட்டு வாதாபி ல வெயிட் பண்ணிட்டு இருக்கா...மாமல்லர் வரார்...எப்படி ஒளிந்து மறைந்து அவள எப்படியாவது கூட்டிட்டு போய்டனும்னு வரார்...

சிவகாமியைப் பார்க்கிறார். ஒருவரை ஒருவர் பார்த்துப்பேச நேரம் இல்லை. விவரிக்க நேரம் இல்லை. அழைக்கிறார். மறுக்கிறாள்.

‘நான் வரமாட்டேன். நான் சபதம் செய்து இருக்கிறேன். தமிழ்ப் பெண்களையும், ஆடவர்களையும் எந்த வீதிகளில் கட்டி இழுத்துக்கொண்டு போனார்களோ, அந்த வீதிகளில் இரத்த ஆறு ஓட வேண்டும். எந்த நாற்சந்தி முனையிலே சவுக்கால் அடித்தார்களோ, அங்கே வாதாபி மக்களின் பிணங்கள் நாதியற்றுக் கிடக்க வேண்டும். வாதாபி நகரத்தின் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் எரிந்து சாம்பலாக ஆக்கப்பட வேண்டும். இந்த வாதாபி தீக்கு இரையாக ஆக்கப்பட வேண்டும்’ என்கிறாள்.

மாமல்லர் கோபத்தோடு திரும்புகிறார்...ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மிக பெரிய சைன்யத்தை திரட்டி கொண்டு வந்து போர்  தொடுக்கிறார்  ..இதன் பிறகு நடப்பதுதான் சரித்திர புகழ் பெற்ற வாதாபி போர்...போர் என்றால் எப்படி பட்ட போர்...அறிஞர் அண்ணாவின் வைர வரிகளிலே சென்று வாதாபியிலே  என்ன நடந்தது பார்ப்போமா...

வாதாபி, சாளுக்கியத்தின் தலைநகரம் - எழில்மிக்க இடம். பல்லவப்படை, அந்த அழகு நகரை, அடியோடு அழித்து விட்டது. சாளுக்கிய நாட்டின் மீது, பல்லவன் நரசிம்மன் போர் தொடுத்தான் - போரென்றால், மிகப் பயங்கரமானது; வரலாற்றிலே மிகமிகக் குறிப்பிடப்பட வேண்டிய சம்பவம்.வாதாபியின் அழிவுபோல், வேறெந்தப் போரிலும், வேறெந்த நகருக்கும் அழிவு நேரிட்டதில்லை என்று கூறுவர் - அவ்வளவு பயங்கரமான அழிவு. 

சாளுக்கியனின் படைகள், சண்ட மாருதத்தில் சிக்கிய கலம் சுக்கு நூறாவது போல, சின்னா பின்னமாயிற்று. ஊர், உருத் தெரியாது அழிந்தது. புலிகேசி மன்னனும் களத்திலே பிணமானான். 




பல்லவப் படையின் தாக்குதலால், சாளுக்கிய சாம்ராஜ்யமே படுசூரணமாகி விட்டது.காஞ்சிபுரம் - வாதாபி! இடையே, எவ்வளவு தொலைவு!! இடையே, எவ்வளவு ஆறுகள், காடுகள், நாடு நகரங்கள்! இவ்வளவையும் தாண்டிச் சென்று, சிங்கத்தை அதன் குகையிலே சென்று தாக்கிக் கொன்றிடும் வீரம்போல பல்லவனின் படை, மாற்றானின் மணிபுரிக்குச் சென்று, தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றது.
Courtesy : http://annavinpadaippugal.info/Kurunavalgal/pidisambal_1.htm 


இப்போ நீங்க இந்த சரித்திர புகழ் வாய்ந்த வாதாபி கோட்டைக்கு உள்ளே செல்ல முழுசா தயார் ஆகிடீங்க....கோப படாதீங்க...அடுத்த பதிவுல கோட்டைக்கு உள்ள கண்டிப்பா போய் பார்த்துடலாம்...

இதன் தொடர்ச்சி :




8 comments:

  1. வெரி இண்ட்ரெஸ்டிங்.சூப்பர்.

    ReplyDelete
  2. பரமேஸ்வரவர்மன் காலத்தில் மீண்டும் காஞ்சியை கைப்பற்றினர்கள் சாளுக்கியர்கள் பிறகு தோற்றார்கள். ஆனால் நரசிம்ம வர்மன் செய்தது போல பேரழிவை உண்டாக்கவில்லை.
    படித்து மறந்ததை நினைவு படுத்தியமைக்கு நன்றி. எழுத்து நடை நன்றாக உள்ளது தொடரட்டும்..

    ReplyDelete
  3. ;)) எழுதி இருக்கும் விதம் சூப்பர். ரசிக்கிற மாதிரி எழுதுறீங்க. நடுவுல பாட்டு வேறயா!! ;D

    ம்.. அடுத்த பகுதில ரீல் விடாம ஒழுங்கா எழுதணும். ம்.

    ReplyDelete
  4. நன்றி ஆசியா...

    நன்றி ராபர்ட்...நீங்கள் சொல்வது சரிதான்... புலிகேசியின் மகன் விக்ரமாதித்யன் மீண்டும் காஞ்சிக்கு படையெடுத்து வந்து வெற்றி பெற்றுள்ளான்...அவனிடம் தோற்றது மாமல்லனின் மகன்...விக்ரமாதிதயனின் வெற்றி ஸ்துபி பாதாமி அருகில் உள்ள pattadakkal என்ற ஊரில் காணக் கிடைக்கிறது... இது காஞ்சி தாரகை என்ற பெயரில் புதினமாக வெளி வந்துள்ளது...எழுதியவர் கல்கியில்லை.பெயர் மறந்து விட்டது....

    imma டீச்சர் ...அந்த பாட்டு எடுத்தது பாதாமில ...அதுனாலதான்...ஒரு feel ஓட உங்கள கூட்டிட்டு போறேன்... :-D

    ReplyDelete
  5. சிவகாமியின் சபதம் புத்தகம் ஊரிலே இருக்கிறது. லேப்டாப்பிலும் பி.டி.எஃப் இருக்குன்னு நினைக்கிறேன். நானும் விழுந்து விழுந்து படித்திருக்கேன் கோமதி! மறுபடி படிக்க ஒரு ஆர்வம் வரும், அப்ப ஒரே மூச்சா படிச்சிருவேன், ஏனோ இன்னும் அந்த ஆர்வம் வரமாட்டேன்னுது! :)

    இரண்டாம் பகுதில க.சுருக்கம் - பாட்டுன்னு போட்டு பூசி மெழுகிட்டீங்க! மூணாம் பகுதில ஒழுங்கா கோட்டைக்குள்ள கூட்டிப் போங்க. :)

    BTW,இந்தப் பாட்டும் இப்பத்தான் பார்க்கிறேன், ஜீவா அழகா இருக்கார்! ;) ;)

    ReplyDelete
  6. very interesting....love your blog :)

    ReplyDelete
  7. எழுத்து நடை நன்றாக உள்ளது தொடரட்டும்..

    ReplyDelete
  8. எழுத்து நடை நன்றாக உள்ளது தொடரட்டும்..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...